--- --:--:-- --

அடியாட்களுடன் சென்ற நிதி நிறுவன உரிமையாளர்..!

3

சேலம் மாவட்டம் மேட்டூரில் சினிமா பாணியில் வீட்டை காலி செய்ய வைத்து காரில் தப்பித்த நிதி நிறுவனர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். சண்முகம் மூர்த்தி என்பவர் கோவை தொட்டிப்பாளையம் பகுதியிலிருந்து வரும் சாமுண்டீஸ்வரி நிதி நிறுவனத்திடம் இருந்து 3.38 ஏக்கர் நிலத்தின் 85 லட்சம் ரூபாயை வாங்கிவிட்டு அதற்கான வட்டி தொகையை செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் அடியாட்களுடன் சண்முக மூர்த்தியின் வீட்டிற்கு சென்ற நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் இருந்த பீரோ, டிவி உள்ளிட்ட பொருட்களை வெளியே எடுத்து வைத்து அவற்றை கையகப்படுத்த முயற்சித்துள்ளார்.

 

தொடர்ந்து அவர்களை கிராம மக்கள் சுற்றி வளைத்த நிதி நிறுவன அதிபர் தமது சொகுசு காரில் காவல் நிலையத்திற்கு சென்று தஞ்சமடைந்தார். விசாரணையின் முடிவில் வழக்கு பதிவு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Right Menu Icon