மாணிக்க விநாயகம் மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல்..!
பிரபல பின்னணிப் பாடகரும் குணச்சித்திர நடிகருமான மாணிக்க விநாயகம் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 73. சென்னை திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் இருந்தபோது மாணிக்க விநாயகருத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். திருடா திருடி, வேட்டைக்காரன், உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். பிரபல பரத நாட்டிய ஆசிரியர் இராமையா பிள்ளையின் மகனான பாடகர் மாணிக்கவிநாயகம் ஏராளமான பக்தி பாடல்களை பாடி இசையமைத்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சைக்கு பின் நன்றாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் பாடல் ஒன்றை பாடுகிறார். மாணிக்கவிநாயகம் இந்த சூழலில் மாரடைப்பால் காரணமாக காலமானார். அவருக்கு திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





