தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் வரும் 23ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 முதல் 25 செல்சியஸ் குறைவாக காணப்படும் எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





