--- --:--:-- --

மாணவியை கத்தியால் குத்திய போதை இளைஞர்..!

1

னியார் பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி தனது நண்பரான ஆஷிக் என்பவரிடம் பள்ளி அருகே பேசிக்கொண்டிருந்தார்.

 

மது போதையில் இருந்த இளைஞருக்கும் மாணவிக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணிமைக்கும் நேரத்தில் மாணவியின் வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓட முயன்றார். இதைக்கண்டு அதிர்ந்த மக்கள் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.

Right Menu Icon