வானத்தில் டிரோன்கள் பறக்க தடை..!
குடியரசு தினத்தை ஒட்டி டெல்லி பகுதியில் டிரோன்கள், ஏர் பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கி பிரம்மாண்ட அணிவகுப்புடன் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக டெல்லியில் வான் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் குடியரசு தின கொண்டாட்டத்தில் பயங்கரவாத சக்திகள் இந்தியாவிற்கு எதிராக டிரோன்கள், ஆளில்லா குட்டி விமானங்கள் ஆகியவற்றை பறக்க விட்டு பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்டு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





