டிச.19-ல் வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்..!
தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான (Special Intensive Revision) படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவைடந்த நிலையில், வரும் 19-ஆம் தேதி வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.
பிகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தொடங்கியது.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை கடந்த 4-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில்,
முதலில் 7 நாட்களுக்கு கால அவசாகம் நீட்டிக்கப்பட்ட நிலையில், 2-வது முறையாக தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு கூடுதலாக 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. படிவத்தை பூர்த்தி செய்து வழங்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படும் எனவும், தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 19-ஆம் தேதி வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.





