--- --:--:-- --

நீங்க விரும்புவதை நான் பேசணும்னு எதிர்பாக்காதீங்க – அண்ணாமலை

4

ஜெயலலிதா குறித்த கருத்துக்கு, அதிமுக தலைவர்கள் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், கூட்டணி தலைவர்களை நடத்தும் விதம் குறித்து எனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைவர்களை போல தரம் தாழ்ந்த விமர்சனம் செய்யமாடேன். ஊழலின் தலைநகரம் தமிழகம் என்ற போக்கினை மாற்றி ஊழலற்ற நல்லாட்சி வழங்கிட வேண்டும் என்பதே எனது ஒற்றை ஆசை மற்றும் லட்சியம் ஆகும்.

 

கூட்டணி கட்சியையும் கூட்டணி தலைவர்களையும் நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் எடுத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி தர்மம் நன்கு உணர்ந்தவன் நான். உண்மைக்கு புறம்பாக பேசியதாக சுட்டிக்காட்டினால் அதை ஏற்பதில் தயக்கம் இல்லை. அதேநேரம் கூட்டணி கட்சி விரும்புவதையெல்லாம் நாங்களும் கூற வேண்டும் என எதிர்ப்பார்ப்பது பொருத்தமற்றது.

 

குறுகிய கால லாப நோக்கங்களுக்காக, இன்றும் நாளையும் கிடைக்கும் தற்காலிக வெற்றிகளுக்காக, தமிழகத்தின் எதிர்காலம் குறித்த எனது கனவுகளை, கொள்கையை அடமானம் வைக்க எனக்கு விருப்பமில்லை. தமிழகத்தில் அடிமட்டம் வரை ஊழலில் ஊறிப்போய் இருக்கும் இந்த அரசியல் போக்கைத்தான் மாற்ற விரும்புகிறேன்.

Right Menu Icon