--- --:--:-- --

தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் இன்று ஆர்ப்பாட்டம்!

4

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தவெக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. இதற்காக காவல்துறையிடம் மாவட்ட செயலாளர்கள் அனுமதி பெற்றதாக தெரிகிறது.

 

இந்நிலையில், சென்னை சிவானந்தா சாலையில் காலை 10 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கலந்து கொள்கிறார். மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென தவெக அறிவுறுத்தியுள்ளது.

தமிழக மக்களின் வாக்குரிமையைக் கேள்விக்குறியாக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மற்றும் அது சார்ந்த குளறுபடிகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தவெக தெரிவித்துள்ளது.

Right Menu Icon