--- --:--:-- --

முழு ஊரடங்கை மூன்றாம் தேதி வரை நீட்டித்து டெல்லி முதல்வர் உத்தரவு..!

4

டெல்லியில் கொரொனா வைரஸ் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கை மூன்றாம் தேதி வரை நீட்டித்து அந்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இந்திய அளவில் தினசரி கொரொனா பாதிப்பில் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் படுக்கை வசதிகள் இன்றியும் ஆக்சிசன் கிடைக்காமலும் இருக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த முழு ஊரடங்கு நாளை காலை 5 மணியுடன் நிறைவடைந்த நிலையில் கொரொனா பரவல் காரணத்தால் வருகிற மே மாதம் மூன்றாம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon