--- --:--:-- --

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294 ஆக அதிகரிப்பு..!..!

1

டிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294ஆக அதிகரித்துள்ள நிலையில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையம் அருகே சென்ற சில நிமிடங்களில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலின் பின் பகுதியில் மோதியது.

இதில் கடுமையாக சேதமடைந்த ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, கவிழ்ந்தன. அருகில் உள்ள தண்டவாளங்களிலும், தண்டவாளத்தை ஒட்டிய பள்ளத்திலும் பெட்டிகள் கவிழ்ந்தன.

விபத்து நடந்த போது, அதற்கு எதிர் திசையில் பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் கடைசியில் உள்ள 4 பெட்டிகள் மீது, கோரமண்டல் ரயிலில் இருந்து சிதறிய பெட்டிகள் மோதின.

இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளான A1, A2 மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளான B1 முதல் B6 வரையிலான 8 பெட்டிகள் முழுவதும் சேதமடைந்தன. B7 முதல் B9 வரையிலான 3 பெட்டிகளும் பெருமளவு சேதமடைந்தன.

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294ஆக அதிகரித்துள்ள நிலையில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையம் அருகே சென்ற சில நிமிடங்களில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலின் பின் பகுதியில் மோதியது.

இதில் கடுமையாக சேதமடைந்த ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, கவிழ்ந்தன. அருகில் உள்ள தண்டவாளங்களிலும், தண்டவாளத்தை ஒட்டிய பள்ளத்திலும் பெட்டிகள் கவிழ்ந்தன.

விபத்து நடந்த போது, அதற்கு எதிர் திசையில் பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் கடைசியில் உள்ள 4 பெட்டிகள் மீது, கோரமண்டல் ரயிலில் இருந்து சிதறிய பெட்டிகள் மோதின.

இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளான A1, A2 மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளான B1 முதல் B6 வரையிலான 8 பெட்டிகள் முழுவதும் சேதமடைந்தன. B7 முதல் B9 வரையிலான 3 பெட்டிகளும் பெருமளவு சேதமடைந்தன.

இந்த விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon