--- --:--:-- --

மது அருந்திய தந்தையால் மகள் தீக்குளித்த சம்பவம்!

1

மதுரை அலங்காநல்லூரில் தந்தை மது அறிந்திருந்ததால் மகள் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாயக்கர் பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சிவகுமரன் மதுக்கடைகள் திறக்கப்பட்டதையடுத்து மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

இந்நிலையில் சிவகுமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு வேதனையடைந்த சிவகுமாரனின் 18 வயது மகள் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். தீ வைத்துக் கொண்டதைக் கண்ட தாய் மகளை காப்பாற்ற முற்பட்டார்.

 

அப்போது அவர் மீதும் தீ பற்றிக்கொண்டது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தாயையும் மகளையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

65 சதவீத தீக்காயங்களுடன் மகளும், தாய் 45 சதவீத தீக்காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon