அரிவாளால் வெட்டிக்கொலை! திருப்பூரில் பரபரப்பு! ஜார்கண்ட மாநில பெண்ணுடன் பீகார் வாலிபர் கள்ளத்தொடர்பு..!
பீகார் மாநிலத்தை சேர்ந்த 27 வயதான பவன் யாதவ், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பி.எம் காம்ப்ளக்ஸ், திருமலை நகர் முதல் வீதி, நெசவாளர் காலனி பகுதியில் வசித்துவந்தார். டெய்லர் வேலை செய்து வந்தார். அதே காம்ப்ளக்ஸில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 50 வயதான உபேந்திரதாரி என்பவர் அவரது மனைவி சித்ராதேவி என்பவருடன் குடும்பத்துடன் குடியிருந்து, டிரைவர் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று 19-ம் தேதி இரவு சுமார் 8 மணியளவில், உபேந்திரதாரி மனைவி சித்ராதேவியுடன், பவன் யாதவ் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு பவன் யாதவ் வீட்டிற்கு தட்டிக்கேட்க உபேந்திரதாரி சென்றுள்ளார் .
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த உபேந்திரதாரி பவன் யாதவை அரிவாளால் உடலில் சில இடங்களில் வெட்டியுள்ளார். இதில் பலத்த இரத்த காயமடைந்த பவன் யாதவை அருகில் இருப்பவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இரவு 11.00 மணியளவில் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பவன் யாதவ் அனுப்பி வைக்கப்பட்டார் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.





