6 நாள்கள் தவித்த மாடு உயிரிழந்தது
நடுக்கடலில் 6 நாள்களாக தத்தளித்துவந்த எருமை மாடு பரிதாபமாக உயிரிழந்தது. ஃபெஞ்சல் புயலின்போது கடலூரில் மேய்ந்து கொண்டிருந்த 32 எருமை மாடுகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன.
அதில், மற்றவை உயிரிழந்துவிட்ட நிலையில் ஒரே ஒரு மாடு மட்டும் 6 நாள்களாக கடலில் நீந்திக் கொண்டிருந்தது. இறுதியாக, முயற்சியை கைவிட்டு அது தற்போது உயிரிழந்திருக்கிறது.






