--- --:--:-- --

கொரானா அச்சுறுத்தல் : இந்தியா – தெ.ஆப்ரிக்கா ஒரு நாள் தொடரும் ரத்தானது..! ஐபிஎல் போட்டிகளும் தள்ளிவைப்பு!!

14

கொரானா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கும் தெ.ஆப்ரிக்காவுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் எஞ்சிய இரு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

இந்தியா வந்துள்ள தெ. ஆப்ரிக்க கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டி இமாச்சல பிரதேசத்தின் தர்ம சாலாவில் நேற்று நடைபெறுவதாக இருந்தது.மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்தானது. அடுத்த இரு போட்டிகள் வரும் 15-ந் தேதி லக்னோவிலும், 18-ந் தேதி கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளது.

 

இந்நிலையில் உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரானா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து 81 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியாவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பார்வையாளர்களை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இதனால், இந்தியா – தெ.ஆப்ரிக்கா இடையிலான எஞ்சிய இரு போட்டிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வரும் 25-ந் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் போட்டிகளும் ஏப்ரல் 15-ந் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon