கொரொனாவால் ஐபிஎல்க்கு பாதிப்பு!
ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக பொதுநல மனு தொடரப்பட்டுள்ளது.
அதில் உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் கொரொனா வைரசுக்கு மருந்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் ஆதலால் வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்த கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




