ஊழியர்கள் இருவருக்கு கொரோனா.சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடல் !!!
கோவையில் கடந்த சில தினங்களாகவே கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.மாவட்டம் முழுவதும் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.20 பேர் உயிரிழந்துள்ளனர்.கோவை மாவட்டம் சோமனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இருவருக்கு இன்று கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து தொடர்ந்து மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது. கிருமி நாசினியினை கொண்டு மருத்துவமனை முழுவதும் தெளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கோவை சோமனூர் பகுதியில் இன்று ஒரே நாளில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் இருவர்,மற்றவர்கள் மூவர் என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






