--- --:--:-- --

உ.பி.யில் தனியே தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயார்: பிரியங்கா காந்தி

10

உத்திரபிரதேசத்தில் தனித்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகி வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 135 ஆவது ஆண்டு விழா கூட்டத்தில் பிரியங்கா உரையாற்றினார்.

 

குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக யார் பொய் சொல்கிறார்கள் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் என்று குறிப்பிட்ட அவர், இவ்விவகாரத்தில் உத்தரப் பிரதேச எதிர்க்கட்சிகள் குரலெழுப்ப அஞ்சுவதாகவும் விமர்சித்தார்.

 

ஆனால் காங்கிரஸ் ஒருபோதும் மாற்றமடைய தயக்கம் காட்டாது என தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநில தேர்தலில் தனித்து எதிர்கொள்ள தயாராகி வருவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon