--- --:--:-- --

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கிய அரிசி காலாவதியானதாக புகார்..!

2

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி காலாவதியானதாக புகார் எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி காலாவதியானது என புகார் வந்துள்ளது.

 

பூவிருந்தவல்லி ஆகிய பள்ளிகளில் புயலால் பாதிக்கப்பட்ட 333 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு போன்ற உள்ள பல்வேறு நிவாரண பொருட்களை அமைச்சர் காந்தி வழங்கினார்.

 

இதில் திருமழிசையில் வழங்கப்பட்ட அரிசி காலாவதியானதாக புகார் எழுந்துள்ளது. அமைச்சர் காந்தி வழங்கிய அரசியல் பேக்கிங் தேதி 5/22 என்றும் காலாவதி தேதி 4 /23 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

பலர் இது தெரியாமல் வாங்கி சென்ற நிலையில் ஒரு சிலர் இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட பொழுது மலுப்பலாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon