--- --:--:-- --

லாரி மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழப்பு..!

6

திருநெல்வேலி மாவட்டத்தில் லாரி மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தார். மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முக்கூடல் அருகே உள்ள பகுதியை சேர்ந்த சகோதரிகள் நெல்லை பேட்டையில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தனர்.

 

கல்லூரிக்கு சென்று விட்டு அவர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். ஆலங்குளம் சாலையில் வரும் பொழுது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் காரின் பின்புற டயர் ஏறி மாணவி சங்கீதா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

அவரது தங்கை வைஷ்ணவி படுகாயம் அடைந்த தகவல் அறிந்து வந்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு பெண் ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon