மயங்கி விழுந்து கல்லூரி மாணவன் பலி..!
ஓமலூர் அருகே பொறியியல் கல்லூரியில் மர்மமான முறையில் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பழனி ஐயப்பனின் என்பவரது மகன் பூசாரிபட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளான். இன்றைய நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்து அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது மாணவனுக்கு நரம்பியல் சம்பந்தமான நோய் இருந்து வந்ததும் அதற்கு காரணமாக வலிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததும் தெரிய வந்தது. சம்பவத்தின் பொழுது மாணவன் காலில் வெட்டுக்காயம் இருந்தது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





