திருவேற்காட்டில் கல்லூரி மாணவி தற்கொலை..!
சென்னை அடுத்த திருவேற்காட்டில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல் அதிகாரி மற்றும் ஏற்கனவே வாடகைக்கு இருந்த வீட்டில் உரிமையாளர்கள் மீது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். 19 வயதான ஸ்ரீநிதி என்ற கல்லூரி மாணவி வீட்டில் அனைவரும் உறங்கிய பிறகு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த விசாரணையில் வினோத் என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பொழுது பணத்தேவையால் அவரது மனைவியிடம் ஏழு சவரன் நகையை வாங்கிய அடகு வைத்து ஏழு சாகரனை வாங்கிக் கொண்டு தரவில்லை என கூறி தங்கள் மீது புகார் அளிக்கப்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.
புகார் குறித்து காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில் நகை பற்றியும் காவல் அதிகாரி ஒருவர் ஸ்ரீநிதியிடம் பேசிய போலீசார் பேசியதாகவும், இதையடுத்து அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.






