சூரிய கிரகணத்தின் போது மண்ணில் கழுத்து வரை புதைக்கப்பட்ட குழந்தைகள்
கர்நாடகாவில் சூரிய கிரகணத்தின்போது மூட நம்பிக்கை காரணமாக மாற்றுத்திறனாளி குழந்தைகளை கழுத்துவரை மண்ணில் புதைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரிய வானில் நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்த நிலையில் கர்நாடக மாநிலம் பகுதியில் சில மாற்று திறனாளி குழந்தைகளை கழுத்து வரை மண்ணில் புதைத்த காட்சிகள் வெளியாகின.
சூரிய கிரகணத்தின் போது இவ்வாறு புதைத்து வைத்தால் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குறைபாடு சரியாகி விடும் என்ற மூட நம்பிக்கையின் காரணமாக குழந்தைகளை புதைத்து வைத்தது தெரியவந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.





