டாடா மோட்டார்ஸ் ஆலையை தொடங்கிவைக்கும் முதல்வர் ஸ்டாலின்..!
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் டாடா மோட்டார்ஸ் ஆலை அமைக்க வரும் 28ம் தேதி அடிக்கல் நாட்டப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் டாடா மோட்டார்ஸ் உற்பத்தி ஆலை அமைக்கிறது. 400 ஏக்கரில் அமையும் அந்த ஆலையில் டாடா மோட்டார்ஸ் தனது ஜாக்குவார் சொகுசு கார் மற்றும் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தியை செய்யவிருக்கிறது. இந்த ஆலையால் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.






