தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு..!
வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் தமிழக கடல் பரப்பை நோக்கி நகரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான வரையிலான மழை பெய்யக்கூடும் நாளை மற்றும் நாளை மறுநாள் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.





