தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!
தென் தமிழக மாவட்டங்கள் நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சனிக்கிழமை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைகூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 28 29ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கன்னியாகுமரி, நெல்லை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





