நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு..!
நீலகிரி, கோவையில் இன்றும் ,நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேக மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோவையில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதி கடலோர பகுதியில் கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




