இமயமலையில் பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 7 பேர் பலி
நேபாளத்தின் டொலஹா மாவட்டத்தில் இருந்து நேற்று உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 15 பேர் இமய மலையில் ஏறியுள்ளனர். மலையில் 5 ஆயிரத்து 630 மீட்டர் உயரத்தில் உள்ள யலொங் ரி சிகரத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் மலையேற்ற வீரர்கள் தங்கி இருந்தனர்.
அப்போது அந்த முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையேற்ற வீரர்கள் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் பனிச்சரிவில் சிக்கி மாயமாகினர்.






