பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞர் கைது..!
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கருவுறச் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த இரண்டாம் தேதி காணாமல் போனதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர் திருச்சியில் இருந்த மாணவியையும், அவருடன் இருந்த இளைஞரையும் சந்தித்தனர்.
கோகுல கிருஷ்ணன் என்ற இளைஞர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றதும், மாணவி ஆறு மாதம் கருவுற்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.



