--- --:--:-- --

சீரியலில் நடிக்க என்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி அனிதா சம்பத்..!

12

ழுத்தமான தமிழ் பேச்சால் செய்திகள் வாசித்து தமிழ் மக்களின் மனதை வென்றவர் தான் அனிதா சம்பத். சன் தொலைக்காட்சி செய்திகளை வாசித்து வந்தவர் அந்த வேலையை நிறுத்திவிட்டு அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தார். பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்டு விளையாடினார், இல்லை தெறிக்கவிட்டார் என்றே கூறலாம்.

 

 

அதிரடி போட்டியாளராக விளையாடினார் அனிதா சம்பத். அதைத்தொடர்ந்து அந்த தொலைக்காட்சியிலேயே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அனிதா சம்பத் இப்போது தனியாக யூடியூப் பக்கம் வைத்து நிறைய வீடியோக்கள், போட்டோ ஷுட்கள், விளம்பரங்கள் நடிப்பது என பிஸியாக உள்ளார்.

 

 

பிஸியாக தனது சொந்த வேலைகளில் கவனம் செலுத்தி வந்த அனிதா சம்பத் இப்போது ரியாலிட்டி ஷோக்களை தொடர்ந்து சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சின்னஞ்சிறு கிளியே என்ற சீரியலில் அனிதா சம்பத் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம்.

Leave a Reply

Right Menu Icon