--- --:--:-- --

டிசம்பர் 10ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்

3

ட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு இரண்டு முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்ற விதி உள்ளது.

 

அந்த வகையில், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில், டிசம்பர் 10ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

அதிமுக ஒருங்கிணைப்பை வலியுறுத்திய செங்கோட்டையன் நீக்கம் மற்றும் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்த பின் முதல் முறையாக அதிமுக பொதுக்குழு கூட உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் – மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான வியூகம், கூட்டணி தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon