தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு?
தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாகக் கூறி சென்னையில் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பல்லாவரத்தை அடுத்த அனகாகபுத்தூரை சேர்ந்த நித்தியா என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் ஊசி போட்டிருக்கிறார்கள். அதன்பிறகு மயக்கமடைந்த நித்யா எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவரை கைது செய்யக்கோரி சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




