தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டுள்ள நடிகை மீரா மிதுன்..!
தற்கொலை செய்து கொள்வதாக கூறி நடிகை மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் தன்னுடைய மரணத்திற்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டுமென ட்விட்டரில் பதிவிட்டு மீராமிதுன் அதனை பிரதமருக்கு டேக் செய்துள்ளார்.
டிப்ரசன் என்ற பெயரில் டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள அவர் சிலர் தனது முகத்தை திருடுவதாகவும், ஸ்டைலை திருடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மன வருத்தத்தில் இருப்பதாக கூறிய மீராமிதுன் தற்கொலை பதிவையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.






