முறைகேடாக மண் அள்ளியதாக எழுந்த புகாரையடுத்து நடவடிக்கை..!
மதுரையில் முறைகேடாக வண்டல் மண் அள்ளியது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாவட்டம் குன்றத்தூர் கிராமத்தில் உள்ள கன்மாயில் விவசாயிகளின் தேவைக்காக வண்டலூர் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஐந்து அடி வரை மட்டுமே மணல் அள்ள ஆணை பிறப்பித்த நிலையில் முறைகேடாக 20 அடிக்கு மண் எடுக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முறைகேடாக மண் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





