பள்ளிகள் திறப்பை முன்னிட்டு போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு..!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கு 900 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, மதுரை, சேலம் மாவட்டங்களுக்கு 1,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.





