திருப்பூர் அருகே விபத்து..10 பேர் காயம்
சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து இன்று அதிகாலை வேலாயுதம்பாளையம் பிரிவு கடக்கும் பொழுது முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதியது.
இதில் பேருந்து ஓட்டுனர் மற்றும் கிளீனர் பலத்த காயம் எற்பட்டது. இதில் 4 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






