ஓடையைக் கடக்க முயன்ற பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலி..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கனமழை வெள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடிய ஓடையைக் கடக்க முயன்ற பெண் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
இந்நிலையில் சட்டிபள்ளி பகுதியை சேர்ந்த ஜலஜா என்ற பெண் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது ஓடையில் அடித்துச் செல்லப்பட்டதாக அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பெண்ணின் சடலத்தை அருகில் உள்ள ஏரியில் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






