இளையராஜா 5 பாரத ரத்னாவுக்கு தகுதியானவர் எனக்கூறிய அமீர்..!
இசைஞானி இளையராஜா 5 பாரத ரத்னாவுக்கு தகுதியானவர் என அக்கா குருவி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் இளையராஜாவின் இசை, தமிழர்கள், உலக தமிழர்களை தாண்டி மொழி தெரியாதவர்களை கூட கவர்ந்துள்ளது.
அவருக்கு ஒரு வாரத்தில் 5 பாரதரத்னா கொடுத்தாலும் தகுதியானது. மொழி தெரியாதவர்கள் கூட பாராட்டுவதை விட ஜனாதிபதி பதவி அல்லது வேறு எந்த பதவியும் பெரியது கிடையாது, இளையராஜா இங்கு இருந்தால் கூட நான் இந்த கருத்தை கூறி இருப்பேன் என தெரிவித்தார்.





