--- --:--:-- --

கைக்குழந்தையுடன் சாலையை கடக்க முயன்ற இளம்பெண் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து..!

4

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒரு பகுதியில் கைக்குழந்தையுடன் சாலையை கடக்க முயன்ற இளம்பெண்ணை அதிவேகத்தில் வந்த பைக் ஒன்று மோதியுள்ளது. விபத்தின் பொழுது பெண்ணின் கையிலிருந்த குழந்தை சாலையில் தூக்கி வீசப்பட்டது.

 

அதிவேகத்தில் வந்த பைக் மோதியதில் இளம்பெண்ணின் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

மேலும் அவரின் கையில் இருந்த சாலையில் தூக்கி வீசப்பட்ட குழந்தை காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon