--- --:--:-- --

மலைப்பாதையில் திடீர் அலறல் சத்தம்..அந்தரத்தில் தொங்கிய சுற்றுலா பேருந்து..!

2

ற்காடு மலைப்பாதையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அந்தரத்தில் தொங்கியதால் பயணிகள் பீதியடைந்தனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு தனியார் பேருந்தில் சுற்றுலா சென்றுள்ளனர்.

 

இவர்கள் சென்ற பேருந்து ஏற்காடு மலை பாதையில் 14வது கொண்ட ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. பேருந்து தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கியதால் பேருந்தில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர்.

 

பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கீழே இறங்கிய பொழுது பேருந்து மீட்கப்பட்டது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon