--- --:--:-- --

திருமணத்திற்கு சென்று வீடு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

5

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரில் வந்து பூட்டி இருந்த வீட்டில் ஒரு கும்பல் கொள்ளையடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. லாரன்ஸ் அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

 

இவர் தனது குடும்பத்தினரோடு தூத்துக்குடியில் உறவினர் வீட்டுக்கு திருமணத்திற்கு சென்று வந்தார். பின்னர் வீடு திரும்பிய லாரன்ஸ் தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவை பார்த்த பொழுது காரில் வரும் மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற காட்சிகள் பதிவாக இருந்தன.

 

திருமண நிகழ்வுக்காக வீட்டில் இருந்த நகைகளை லாரன்ஸ் குடும்பத்தார் எடுத்து சென்றதால் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு சவரன் நகை மட்டும் திருடப்பட்டுள்ளது.

 

Right Menu Icon