பள்ளி வேன் மீது கார் மோதி விபத்து..!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வாசல் மீது கார் மோதிய விபத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.
திருச்செங்கோட்டில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சங்கரன்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக காரும் அதற்கு எதிரே வந்த பள்ளி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணித்த குடும்பத்தினர் 5 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளன. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





