--- --:--:-- --

சாக்லேட் வாங்கி கொடுத்து 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 66 வயது முதியவர்!

4

மதுரையில் சாக்லேட் வாங்கி கொடுத்து ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 66 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை சத்திய சாய் நகரை சேர்ந்த சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்கிறார். சிறுமியின் தாய் நேற்று கடைக்கு சென்ற நிலையில் வீட்டில் சிறுமியை தனியாக இருந்தார்.

 

இந்நிலையில் பக்கத்து வீட்டு முதியவர் ரங்கசாமி சூழ்நிலையை பயன்படுத்தி சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமியின் தாயார் அளித்த புகாரையடுத்து அனைத்து மகளிர் போலீசார் நள்ளிரவில் முதியவரை கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon