--- --:--:-- --

பிக்பாஸ் நடிகைக்கு தொந்தரவு என சமூக வலைதளம் மூலம் போலீசில் புகார்..!

8

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான நடிகை வைஷ்ணவி. இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து தொந்தரவு செய்வதாக வீடியோ ஆதாரங்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை வைஷ்ணவி.

 

இவர் ரேடியோ ஜாக்கியாக இருந்தவர். தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இளைஞர் ஒருவரை பற்றி புகார் அளித்துள்ளார். அதில் இரு சக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வருவதாகவும் வீட்டின் வாசலுக்கு வந்து தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த புகாரை சென்னை காவல் துறையின் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

Right Menu Icon