--- --:--:-- --

திருமங்கலம் அருகே 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..! வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் சோதனையில் கடத்தல் தடுப்பு..!

6.1

திருமங்கலம் செங்குளத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருமங்கலம் வட்ட வழங்கல் அலுவலருக்கு வீரமுருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வீரமுருகன் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் சிவசுப்பிரமணியன் திருப்பதி ஆகியோர் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

 

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ரேஷன் அரிசி மூட்டைகளை கொண்டு வந்து சாவடி அருகே இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர். அதிகாரிகளை கண்டவுடன் அவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்,50 கிலோ எடையுடன் 10 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர்.

 

பொன்னங்கலத்தை அடுத்த எருமலை பட்டியைச் சேர்ந்த கண்ணன் செங்குளத்தை சேர்ந்த பரமசிவம் ஆகியோர் தப்பியவர்கள் தெரியவந்தது. இதுகுறித்து குடிமைப்பொருள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

இதே போல் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை செய்தால் மக்களுக்கு நல்ல தரமான ரேசன் பொருள் கிடைக்கும் என்று அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.

Right Menu Icon