12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பாக தேர்வுத்துறை புதிய தகவல்..!
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான உடன் அனைத்து விபரங்களும் உயர்கல்வித்துறைக்கு அனுப்பப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 23ஆம் தேதி வெளியாக உள்ளது.
முடிவுகள் வெளியானதும் தேர்வு எழுதிய 8.5 லட்சம் மாணவர்களின் விபரங்களும் உயர்கல்வித்துறைக்கு அனுப்பப்படும் என கல்வித் துறை தெரிவித்திருக்கிறது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண் உண்மைத்தன்மையை உடனடியாக அந்தத் துறைகளில் தெரிந்து கொள்ளலாம் எனவும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.





