--- --:--:-- --

பாஜகவுக்கு கைலாசா வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம்.. !

5

பிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு கைலாசத்தின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்ததாக ட்விட்டர் பதிவு ஒன்று பரவி வருகிறது. பெங்களூரு அருகே ஆசிரமம் நடத்தி வந்த நித்தியானந்தா கைலாசா நாட்டை வாங்கி அங்கேயே குடியேறி விட்டதாக இணையதளம் மூலம் அறிவித்தார்.

 

இந்த நிலையில் அண்மையில் பாஜக செய்தித் தொடர்பாளர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையாக மாறியது. இந்த வழக்கு தொடர்பாக கைலாச நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் முகமது நபிக்கு எதிராக இந்திய அரசியல்வாதிகள் கூறிய கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த கட்சி நிர்வாகிகளை இடைநீக்கம் செய்ய ஆளும் கட்சி எடுத்த முடிவை கைலாச வரவேற்கிறது எனவும் அமைதியை குலைக்கும் நடவடிக்கைகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கைலாசா கேட்டுக் கொள்வதாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon