பூஜா ஹெக்டேவிடம் ஆணவத்துடன் நடந்து கொண்ட விமான ஊழியர்..!
விமானப் பயணத்தின் பொழுது தன்னிடம் விமான ஊழியர் ஒருவர் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டவர் மும்பையில் இருந்து தான் இன்டிகோ விமானத்தில் பயணித்ததாக போது அதிலிருந்த விமான ஊழியர் அச்சுறுத்தும் வகையிலும் ஆணவத்துடன் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
காரணமின்றி அந்த ஊழியர் அவ்வாறு நடந்து கொண்டது மிரள வைக்கும் வகையில் இருந்ததாகவும் பூஜா ஹெக்டே இன்டிகோ நிறுவனத்தை சுட்டிக்காட்டி குறிப்பிட்டுள்ளார்.






