பஞ்சாப் பாடகர் உயிரிழப்பு..!
பிரபல பாடகர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் குற்றவாளியான கனடாவை சேர்ந்த ஒரு நபர் பொறுப்பேற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. பாடகர் சித்தூர் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ள மாநில ஆம் ஆத்மி அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பஞ்சாப் மாநில பாஜக தலைவர் ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இந்நிலையில் சித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பஞ்சாப் அரசு நீதிமன்ற விசாரணை கோரியுள்ளது. பஞ்சாப் மாநில முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பாடகர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நீதி விசாரணை கோரி தலைமை நீதிபதியிடம் முறையிட உள்ளதாகவும் இது தொடர்பாக ஏற்பட்ட உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில டிஜிபி மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில் தாம் அவ்வாறு கூறவில்லை எனவும் கொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாகவும் பஞ்சாப் டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் பாடகர் சித்து படுகொலைக்கு கனடாவை சேர்ந்த கோல்டி பிராட் எனும் தேடப்படும் குற்றவாளி பொறுப்பை ஏற்று அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றியும் உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





