--- --:--:-- --

ஆட்டு குடலை மாலையாக அணியும் பூஜை..!

8

விழுப்புரம் அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஆட்டு குடலை மாலையாக அணிவித்து சூரியனை சுற்றி வரும் நிகழ்வுகள் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 

விழுப்புரம் மாவட்டம் எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள கணபதி மகா மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆட்டு குடலை மாலையாக அணிவிக்கும் பூஜை நடைபெற்றது. அப்போது ஆட்டுக்குட்டியை வெட்டி அதன் குடலை உருவிய பக்தர்கள் சாமியாடிய நபரின் கழுத்தில் மாலையாக அணிவித்து சுற்றிவர வைத்தனர்.

 

நூதன முறையில் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவில் ஆட்டின் ரத்தம் கலந்த சாப்பாட்டை பருகினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பிக்கை உள்ள பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon