பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது நடந்த விபரீதம்..!
கேரள மாநிலம் தொடுப்புராவில் சாலையில் சிக்னலில் நின்றிருந்த பேருந்து புறப்பட்ட சமயத்தில் அதனை இருசக்கர வாகனத்தில் முந்த முயன்ற ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் இடித்து தள்ளப்பட்டு அவர் மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. பேருந்தை முந்த முயன்ற போதே இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





